காட்டி கொடுத்த இலை புரோக்கர் - அடுத்தடுத்த கேள்விகளால் திக்குமுக்காடும் தினகரன்..!!

Asianet News Tamil  
Published : Apr 22, 2017, 07:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
காட்டி கொடுத்த இலை புரோக்கர் - அடுத்தடுத்த கேள்விகளால் திக்குமுக்காடும் தினகரன்..!!

சுருக்கம்

delhi police asking questions to ttv dinakaran again and again

இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் அடுத்தடுத்த கேள்விகளால் தினகரன் திக்குமுக்காடி போயுள்ளாராம்.

கடந்த 17 ஆம் தேதி அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து டெல்லி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஸ்ரவத் தலைமையில் சென்னை வந்த போலீசார் டிடிவி தினகரனை சந்தித்து சம்மன் வழங்கினர்.

அதில் இன்று டெல்லி போலீசார் முன் நேரில் ஆரஜரகுமாறு உத்தரவிடபட்டிருந்தது.

அதன்படி டெல்லி குற்றவியல் போலீசாரின் முன்பு டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் டெல்லி போலீசார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்த பட்டு வருகிறது.

தொடர்ந்து போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தினகரன் திக்குமுக்காடி வருகிறார் எனவும் தினகரனின் தொலைபேசி அழைப்புகளை போலீசார் சோதனை செய்து வருவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!
மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!