இந்த சாதனையை செய்தது திராவிட இயக்கம் தான்... பெருமிதம் கொள்ளும் கனிமொழி எம்.பி.!!

Published : Oct 18, 2022, 09:49 PM IST
இந்த சாதனையை செய்தது திராவிட இயக்கம் தான்... பெருமிதம் கொள்ளும் கனிமொழி எம்.பி.!!

சுருக்கம்

தங்களது பெயருக்கு பின் சாதி பெயரை சேர்த்துக் கொள்ளும் முறையை ஒழித்தது திராவிட இயக்கம் தான் என திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தங்களது பெயருக்கு பின் சாதி பெயரை சேர்த்துக் கொள்ளும் முறையை ஒழித்தது திராவிட இயக்கம் தான் என திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், பெயர்களுக்கு பின்னால் ஜாதி பெயரை போடுவதை ஒழித்தது திராவிட இயக்கங்கள் தான். ஜாதியை பெருமையாக வெளியே செல்வது அவமானம் என்ற நிலைக்கு தமிழர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அந்த சாதனயை செய்தது திராவிட ஆட்சி தான்.

இதையும் படிங்க: நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்

கடல் சார்ந்த வாழ்கையை வாழும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள் தான் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில், திமுக சுற்று சூழல் அணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதையும் படிங்க: வீடுவீடா ஓட்டு கேட்கும்போது ஆக்கிரமிப்பு நிலமென்று தெரியலயா.?? ஸ்டாலின் அரசை கழுவி கழுவி ஊற்றும் சீமான்.

இதில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் தா வேலு மற்றும் ஜெ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசுகையில் தான் கனிமொழி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?