ஓட்டுக்கும், சீட்டுக்கும் வன்னியர் மக்களை பயன்படுத்துகிறார் டாக்டர்.ராமதாஸ்.! புரட்டி எடுக்கும் வேல்முருகன்.!

By T BalamurukanFirst Published Nov 21, 2020, 9:34 PM IST
Highlights

7 பேர் விடுதலை குறித்து தமிழக கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மேலும் தாமதமானால் 7.5 இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது போல், 7 பேர் விடுதலை குறித்தும் அரசாணை வெளியிட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 
 

 

அரியலூர் மாவட்டம். செந்துறையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்..., 
"7 பேர் விடுதலை குறித்து தமிழக கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மேலும் தாமதமானால் 7.5 இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது போல், 7 பேர் விடுதலை குறித்தும் அரசாணை வெளியிட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 

ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் தற்போது வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேசி வருகிறார். தேர்தல் வரும்போது தான் வன்னிய இன மக்கள் மீது ராமதாசுக்கு அக்கறை ஏற்படும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளித்து தேர்தலிலும் போட்டியிடுவோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது, மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதையே காட்டுகிறது, என்றார்

click me!