டாக்டர் ராமதாஸும் சாதி அரசியல்தானே பண்றாரு? கிறுகிறுக்க வைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி..!

By Vishnu PriyaFirst Published Oct 17, 2019, 6:16 PM IST
Highlights

இந்தியாவில், செய்யும் தொழில் ரீதியில் ‘எலைட் கம்யூனிட்டி’ என்று அடையாளப்படுத்த படுபவர்கள் டாக்டர்கள். எல்லா தரப்பு மக்களை விடவும் தங்களை ஒரு படி உயர்வாகவே  அவர்கள் எண்ணிக் கொள்வதும், மக்களும் அவர்களை ‘கண்கண்ட கடவுள்’ ஆக ட்ரீட் செய்வதுமே இதற்கான காரணங்கள்.  இந்த ஜனநாயக தேசத்தின் சில பொது கடமைகளுக்குள் இவர்கள் வரவே மாட்டார்கள். குறிப்பாக ஓட்டு போடக் கூட  அநேக டாக்டர்கள் வருவதில்லை! என்பது பொதுவான விமர்சனம்.

இந்தியாவில், செய்யும் தொழில் ரீதியில் ‘எலைட் கம்யூனிட்டி’ என்று அடையாளப்படுத்த படுபவர்கள் டாக்டர்கள். எல்லா தரப்பு மக்களை விடவும் தங்களை ஒரு படி உயர்வாகவே அவர்கள் எண்ணிக் கொள்வதும், மக்களும் அவர்களை ‘கண்கண்ட கடவுள்’ ஆக ட்ரீட் செய்வதுமே இதற்கான காரணங்கள். இந்த ஜனநாயக தேசத்தின் சில பொது கடமைகளுக்குள் இவர்கள் வரவே மாட்டார்கள். குறிப்பாக ஓட்டு போடக் கூட அநேக டாக்டர்கள் வருவதில்லை! என்பது பொதுவான விமர்சனம். ஆனால் இதே தேசத்தின் ஒரு அங்கமான தமிழகத்தில் டாக்டர்களே அரசியல் கட்சியை நடத்தும் முரணும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்காக இவர்கள் கட்சி நடத்துவதுதான் அதில் சங்கடத்தோடு கவனிக்க வேண்டிய அம்சமே. 


தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் ‘வன்னியர்’ இன மக்களை மையமாக வைத்து டாக்டர் ராமதாஸ் ‘பாட்டாளி மக்கள் கட்சி’ எனும் இயக்கத்தை நடத்தி வருகிறார். அவரது மகனான டாக்டர் அன்புமணியும் இந்த கட்சியின் வீரியமிக்க தலைவராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். சொல்லப்போனால் ‘பா.ம.க. துவங்கப்பட்டதும், நடத்தப்படுவதும் அன்புமணிக்காகத்தான்.’ என்பதே தி.மு.க.வினர் உள்ளிட்ட ராமதாஸின் எதிராளிகளின் விமர்சனம். அதேபோல் தென்தமிழகத்தில் அதிகமாகவும், தமிழகமெங்கும் ஓரளவு பரவலாகவும் இருக்கின்ற ’தேவேந்திர குல வேளாளர்’ (பள்ளர்) எனும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை மையமாக வைத்து டாக்டர் கிருஷ்ணசாமியோ ‘புதிய தமிழகம்’ எனும் கட்சியை நடத்தி வருகிறார். 


ஆக இந்த மூன்று டாக்டர்களும் மருத்துவத்தை பார்ட் டைம் ஆக பண்ணுகிறார்களா அல்லது அரசியலை அப்படி பார்ட் டைம் ஆக பண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. மொத்தத்தில் இவர்கள் இரண்டு குதிரைகளையும் ஒரே சீராக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணசாமியும், ராமதாஸும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்தனர். இப்போது கிருஷ்ணசாமி அதிலிருந்து கழன்று கொண்டுவிட்டார். வெளியே வந்த கிருஷ்ணசாமி, வழக்கம்போல் அ.தி.மு.க.வை வெளுத்தெடுக்கிறார் சுளீர் விமர்சனங்களால். அதுமட்டுமில்லாமல் எல்லா கட்சிகளையும் ஏகபோகமாகவே திட்டித் தள்ளியிருக்கிறார்.

அதில் ஹைலைட் பாயிண்ட்கள் இதோ....
*    எங்களின் நியாயமான, சாதாரண கோரிக்கையை ஏற்க எடப்பாடிக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இந்த தயக்கம் தேவையே இல்லை. 
*    கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க. சரியாகச் செயல்படுவதில்லை. ஏன் இப்படி நடந்துக்குறாங்க அப்படின்னு புரியலை. 
*    இந்த நிமிடம் வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், எங்களின் கொடியை அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் பிரச்சார தொகுதிகளில் பயன்படுத்தக்கூடாது. எங்க கொடியை காரில் கட்டக்கூடாது. 


*    அரசியலில்  முடிந்த முடிவு என்று எதுவுமே கிடையாது. அதே நேரத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி! எனும் பேச்சுக்கே இடமில்லை. 
*    இந்த நிமிடம் வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால் அவர்களோடு இணைந்து செயல்பட மாட்டோம். 
*    என்னமோ நான் மட்டும்தான் சாதி அரசியல் பண்றேன்னு சொல்றாங்க. ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு கேட்டது ஏன்? அப்படின்னு ஈ.வே. ராமசாமிட்ட (பெரியார்) கேட்டிருக்க வேண்டிதானே?

*    இந்த தமிழ்நாட்டுல எல்லா அரசியல் கட்சிகளும் ஜாதியை அடிப்படையாக வெச்சுதான் இயங்கிட்டு இருக்கிறாங்க. பா.ம.க.வை நடத்துற ராமதாஸும் இதே அடிப்படையில்தான் அரசியல் பண்றார். 
*    தி.மு.க.விடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இடதுசாரிகள் தேர்தல் நிதியாக வாங்கினாங்கன்னு  பேசப்படுது. அப்படி வாங்கியது சரியா, தவறான்னு சொல்ல முடியாது. 
*    ஆனால் ஒன்று தங்கள் கொள்கைகளை நிறைவேற்ற முடியாமல், விலகிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள். இதைவிட கேவலமான் சூழ்நிலை எதுவுமே இருக்க முடியாது.
.......” என்று வெளுத்திருக்கிறார்

click me!