வீட்டுக்கு காய்கறி இல்லையா? கவலைப்படாதீங்க.. ஒரே போன்கால், வீடு தேடி வரும் காய்கறி, மளிகை பொருட்கள்..

By Ezhilarasan BabuFirst Published May 31, 2021, 10:03 AM IST
Highlights

அங்காடியின் பெயர், தொலைபேசி எண், வார்டு மற்றும்  அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் என வகைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது .பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி விருப்பமுள்ள விற்பனையாளர்கயிடம் தேவையான மளிகை பொருட்களை பெற்று பயனடையலாம்.

கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு 7.6.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டகளின்களின் மூலம் விற்பனை செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 2197 நபர்களுக்கு இன்றுவரை மாநகராட்சியின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலம் மளிகை பொருட்களை வீடுகளுக்கே கொண்டுசென்று விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அங்காடியின் பெயர், தொலைபேசி எண், வார்டு மற்றும்  அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் என வகைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது .பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி விருப்பமுள்ள விற்பனையாளர்கயிடம் தேவையான மளிகை பொருட்களை பெற்று பயனடையலாம். என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

click me!