ஹெல்மெட் போடலையா..? இனி ரோட்டுல இல்ல... வீட்டுக்கே தேடி வருது ஆப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 19, 2019, 2:40 PM IST
Highlights

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிசெல்பவர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். 
 

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிசெல்பவர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

 

சட்ட விதிகளை மீறுவோரை சி.சி.டி.வி கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து, அவர்களது வீட்டிற்கு சலாண்களை அனுப்ப போக்குவரத்து காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டு இருந்தார். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் நடுரோட்டில் நிறுத்தப்படக் கூடாது என அவர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.

புனே நகரம் முழுவதும் போக்குவரத்து காவல் துறையினரால் பொறுத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோரை மிக எளிமையாக கண்டறிந்து விட முடியும். பின் புகைப்படங்களை கொண்டு இ-சலான் உருவாக்கி, அவரவர் வீடுகளுக்கு அனுப்ப முடியும். 

வீட்டிற்கு வரும் சலான்களுக்கு, விதிகளை மீறியவர்கள் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்த முடியும். எனினும், தொடர்ந்து விதிகளை மீறுவோர் மீது மிகப்பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். புனே நகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியும் நடைமுறைக்கு எதிராக பலர் கருத்துக்கூறி வருகின்றனர்.

click me!