ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறவங்கள துரத்தி பிடிக்காதீங்க !! காவல் துறையினருக்கு கோர்ட் எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Nov 21, 2019, 11:46 PM IST
Highlights

கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளை போலீசார் துரத்திப்பிடிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற அறிவுரை வழங்கியுள்ளது.

வாகனச் சோதனையின்போது நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை பல நேரங்களில் போலீசார் துரத்திச் சென்று கையும் கழவுமாக பிடிக்கின்றனர்.  இந்த துரத்தல்களின்போது போலீசாருக்கு பயந்து வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை வேகமாக இயக்கும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கிறது. 

இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ரண்டதனி பகுதியை சேர்ந்த ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தான் தனது பைக்கில் ரண்டதனி நெடுச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது போலீசார் தன்னை இடைமறித்ததாகவும், அப்போது நிலைதடுமாறி போலீசாரை இடித்துக்கொண்டு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளனது. 

ஆனால் விபத்து ஏற்படுத்திய காரணத்திற்காக போலீசார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தனக்கு இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரித்த நீதிமன்றம், ‘‘ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதியை மீறிய வாகன ஓட்டிகளை போலீசார் துரத்திப் பிடிக்கக்கூடாது. 

மேலும், போலீசார் நடுரோட்டில் நின்று கொண்டு வாகான ஓட்டிகளை தடுத்து நிறுத்தக்கூடாது. போலீசார் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனச் சோதனையில் ஈடுபடக்கூடாது’’ என தெரிவித்துள்ளது.

click me!