நம்பாதீங்க ! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கு கணிப்பை நம்பாதீங்க !! இவரா இப்படி சொன்னார் ?

By Selvanayagam PFirst Published May 20, 2019, 7:24 AM IST
Highlights

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நம்ப வேண்டாம் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 7 மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், மாலி 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே வந்தன. அதாவது பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்தார்.-

அதில் எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர்  ஆவதற்கு முன்பு, ஒரே நாளில் 16 தேர்தல் கூட்டங்களில் நான் பேசுவது வழக்கம். இப்போது மக்களிடம் இருந்து விலகி விட்டேன். 

ஆனால், மதிக்கத்தக்க பதவியில் இருக்கிறேன். இப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாட் போலை (நிஜ தேர்தல்) நம்புங்கள் என தெரிவித்தார்..

சாதி, மதம், பணம் பார்த்து தேர்தலில் ‘சீட்’ கொடுப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெற கோடிக்கணக்கில் செலவளிப்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்..

click me!