’நாய்க்கறி சர்ச்சை; ஆட்டைக்கடித்து நாயைக்கடித்து கடைசியில மீன் கடிக்க வந்திருக்காக...

By sathish kFirst Published Nov 21, 2018, 3:40 PM IST
Highlights

கடந்த சில தினங்களாக சென்னை மக்களின் வயிற்றைக் கலக்கி வரும் நாய்க்கறி, ஆட்டுக்கறி இறைச்சி சர்ச்சையில் புதிதாக மீன் கறி ஒன்று உள்ளே நுழைந்துள்ளது. அக்கறியை மீன் என்று சொல்லி புக் செய்தது  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றொருவரை போலீஸார் தீவிரமாகத்தேடி வருவதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.பி.லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.


கடந்த சில தினங்களாக சென்னை மக்களின் வயிற்றைக் கலக்கி வரும் நாய்க்கறி, ஆட்டுக்கறி இறைச்சி சர்ச்சையில் புதிதாக மீன் கறி ஒன்று உள்ளே நுழைந்துள்ளது. அக்கறியை மீன் என்று சொல்லி புக் செய்தது  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றொருவரை போலீஸார் தீவிரமாகத்தேடி வருவதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.பி.லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.

ஜோத்பூரிலிருந்து கடந்த சனியன்று சென்னை எக்மோர் ரயில் நிலையத்துக்கு வந்த விநோதமான இறைச்சி குறித்த சர்ச்சைகள் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. ஆனாலும் அந்த 1190 கிலோ எடைகொண்ட இறைச்சிகள் கடும் நாற்றம் எடுத்ததால் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. இடையில் ஷகீலா பானு என்ற பெண் அது ஆட்டிறைச்சிதான் என்றும் அது தனக்கு சொந்தமானது என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இது தொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் இன்று மதியம் நிருபர்களை சந்தித்த லூயிஸ் அமுதன்,’ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெலிவரி ஏஜென்ட் ஜெய்சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஏஜென்ட் கணேசன் என்பவரை தேடி வருகிறோம். மேலும் இதை அனுப்பியவரை கண்டுபிடிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூர் செல்ல உள்ளது.

ரயிலில் வரக்கூடிய இறைச்சிகளை, கண்காணிப்பது உணவு பாதுகாப்பு மற்றும் தமிழக உணவு பாதுகாப்பு அமைப்பு ஆகியவைதான். இறைச்சி உண்ண முடியாததா, உண்ணத்தக்கதா என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். வேறு ஏதாவது ஒரு பெயரை குறிப்பிட்டுவிட்டு, இறைச்சி அனுப்பப்படுவது தொடர்பாக போலீசாரும் இனிமேல் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

உணவு டெலிவரி ஏஜென்ட் எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறார் என்பது தொடர்பாகவும், விசாரணை நடந்து வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் முழு அளவிலான விசாரணைக்கு பிறகு அந்த தகவல்களை தெரிவிக்கிறோம். மீன் என்றுதான் புக் செய்து ரயிலில் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு பொய் சொல்லி புக் செய்தது யார் என்பதை ஜோத்பூர் சென்ற பிறகு போலீசார் உறுதி செய்வார்கள். இவ்வாறு ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.பி. லூயிஸ் அமுதன் தெரிவித்தார்.

ஆட்டைக்கடித்து நாயைக்கடித்து கடைசியில மீன் கடிக்க வந்திருக்காக சபாஷ்.

click me!