அம்மா கிளினிகிற்கு மருத்துவர்கள்,செவிலியர்கள், அவுட் சோர்சிங் மூலமாகவே தேர்வு. பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.

By Ezhilarasan BabuFirst Published Feb 12, 2021, 2:52 PM IST
Highlights

தடுப்பூசி போட்ட அடுத்த 4 வாரத்திற்கு மது அருந்தக்கூடாது என்றும் மேலும் மது அருந்துவதை குறைத்துக் கொள்வது நல்லது எனவும் அவர் கூறினார். 20 லட்சம் டோஸ் இருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அம்மா கிளினிகிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமணை பணியாளர்களை அவுட் சோர்சிங் மூலமாகவே தேர்வு செய்கிறோம். சுகாதாரத் துறை உத்தரவின்படி யாருமே பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்த மூன்றாவது ஆய்வு கூட்டம் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைப்பெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் இக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மேலும் இணை ஆணையர்கள், சுகாதார ஊழியர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

சென்னையை பொருத்தவரை 33 ஆயிரம் பேருக்கு வெற்றிகரமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இதுவரை இல்லை, நாளை முதல் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படவுள்ளது. அடுத்த கட்டமாக முதியவர்கள், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு போடப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டார். ஒரு வார காலக்கட்டத்தில் மருத்துவமனையில் பணிப்புரிப்பவர்கள், அங்கண் வாடி ஊழியர்கள் தடுப்பூசி விரைவில் போட்டுக்கொள்ள வேண்டும்

.60 தனியார் மருத்துவமனைக்கு தடுப்பூசி போட அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட்ட அடுத்த 4 வாரத்திற்கு மது அருந்தக்கூடாது என்றும் மேலும் மது அருந்துவதை குறைத்துக் கொள்வது நல்லது எனவும் அவர் கூறினார். 20 லட்சம் டோஸ் இருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

அம்மா கிளினிக் குறித்த கேள்விக்கு சென்னையில் 200 வார்டு உள்ளது. அதில் 128  இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளதை விரைவில் முடிக்க சொல்லி இருக்கிறார்கள், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமணை பணியாளர்களை அவுட் சோர்சிங் மூலமாகவே தேர்வு செய்கிறோம். சுகாதாரத் துறை உத்தரவின்படி யாருமே பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 

click me!