நீங்கள்தான் கடவுள்... மருத்துவர்கள் காலில் விழுந்து வணங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ....!

Published : Apr 24, 2020, 06:32 PM IST
நீங்கள்தான் கடவுள்... மருத்துவர்கள் காலில் விழுந்து வணங்கிய  காங்கிரஸ் எம்.எல்.ஏ....!

சுருக்கம்

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை மருத்துவர்கள்தான் கடவுள் என்று கூறிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

மக்களிடம் குறைகளை தீர்க்க செல்வதாலும் அரிசி மற்றும் காய்கறி வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபடுவதாலும் புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மருத்துவ பரிசோதனை  நேற்று செய்வதாக அறிவிக்கப்பட்டது. காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த பரிசோதனை நடத்தப்படும். விரும்புபவர்கள் இந்த பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆர்டி- பிசிஆர் ( RT-PCR)முறையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்களில் காங்கிரஸில் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அதிமுகவில் அன்பழகன், பாஸ்கர், பாஜகவில் சாமிநாதன், சங்கர் ஆகியோர் பரிசோதனை செய்திருந்தனர்.
பரிசோதனைக்கு வந்த அரியாங்குப்பம் தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி பரிசோதனை செய்த மருத்துவர்களின் காலில் விழுந்து வணங்கி சேவையை பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!