இங்கிலாந்து புறப்பட்டார் டாக்டர் ரிச்சர்டு - முதல்வருக்கு சிங்கப்பூர் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 06:35 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
இங்கிலாந்து புறப்பட்டார் டாக்டர் ரிச்சர்டு - முதல்வருக்கு சிங்கப்பூர் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை

சுருக்கம்

முதல்வர் உடல்நலம் தேறி வருவதால் லண்டன் டாக்டர் ரிச்சர்டு இங்கிலாந்து புறப்பட்டார். அவரது ஆலோசனையின் பேரில் சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சையை தொடர்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு பீலே வரவழைக்கப்பட்டு சிக்ச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ வந்து சிகிச்சை அளித்தனர்.  மேலும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பேரில் தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது.
தனக்கு சிக்ச்சை அளிக்கும் டாக்டர்களிடம் பேசி தனக்கான சிகிச்சை பற்றி கேட்டு தெரிந்துகொள்ளும் அளவிற்கு முதல்வர் உடல்நிலை தேறி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் உடல்நிலை பூரணமாக தேறி வருவதால் மேலும் சிகிச்சையை சிங்கப்பூர் மருத்துவர்கள் தொடர தகுந்த ஆலோசனை வழ்ங்கிவிட்டு லண்டன் டாகடர் ரிச்சர்டு பேல் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.

அவருடைய வழிகாட்டுதலின் பேரில் சிங்கப்பூர் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!