
மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல் திருமாவளவனை கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு நட்பு அடிப்படையில், மரியாதை நிமித்தமாக, திருமாவளவனை சந்தித்ததாக பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக தொல். திருமாவளவனை சந்தித்து பேசினேன் என்று கூறினார். இடைத்தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிகிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.