மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் ’இளம் வயது மோடி’லுக்கில் இருக்கும் இவர் யார் தெரியுமா..?

Published : Oct 15, 2020, 12:51 PM IST
மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் ’இளம் வயது மோடி’லுக்கில் இருக்கும் இவர் யார் தெரியுமா..?

சுருக்கம்

அதுசரி, சபரீசனுடன் இளம் வயது மோடி போல் இருக்கும் அந்த இளைஞர் யார் என்று கேட்கிறீர்களா..? 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டி-சர்ட், ஹெல்மெட் அணிந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சைக்கிளில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அவரது பின்னணியில் பாலம் இருக்கும். சென்னையில் இப்படி என்றால் டெல்லி சென்றுள்ள அவரது மருமகன் சபரீசன் பாலத்தின் பின்னணியி சைக்கிள் பயிற்சி செய்யும் போட்டோவை  வெளியிட்டு இருக்கிறார்.

  

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சமீபத்தில் டில்லிக்கு போயிருந்தார். அவருடன் இளம் வயது மோடி உருவத்தை ஒத்த ஒருவரும் அதிகாலை, தலையில் சைக்கிளிங் ஹெல்மெட் மாட்டி, ஸ்போர்ட்ஸ் ஜெர்சி மாடல் உடையில், இந்தியா கேட், பார்லிமென்ட் கட்டடம் முன் சைக்கிள் ஓட்டி, அந்த படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். 

இதைப் பார்த்த சிலர், 'முன்பு ஹம்மர் வைத்திருந்த குடும்பம், இப்போது சைக்கிள் ஓட்டுகிற நிலைக்கு வந்துவிட்டது. இதுதான் மோடி ஆட்சியின் சாதனையா? என கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் சிலர், 'இந்த சைக்கிளின் விலையே பல லட்சம் ரூபாய் இருக்கும். அது தெரியாமல் பேசக்கூடாது' என பதிலடி கொடுத்து வருகின்றனர்.  

அதுசரி, சபரீசனுடன் இளம் வயது மோடி போல் இருக்கும் அந்த இளைஞர் யார் என்று கேட்கிறீர்களா..? கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் மருமகன் அர்ஜுன்.  மருமகனும், மருமகனும் கைகோர்த்து டெல்லியில் உலா வருவது கூட்டணி குறித்து பேசுவதற்கும், கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் இந்தப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!