பயணிகள் ரயில்கள் இனி எப்போது ஓடும் தெரியுமா...? மத்திய அரசு லேட்டஸ்ட் விளக்கம்..!

Published : Aug 12, 2020, 03:33 PM IST
பயணிகள் ரயில்கள் இனி எப்போது ஓடும் தெரியுமா...? மத்திய அரசு லேட்டஸ்ட் விளக்கம்..!

சுருக்கம்

பயணிகள் ரயில்- புறநகர் ரயில் சேவை மறு உத்தரவு வரும்வரை பயன்பாட்டுக்கு வராது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பயணிகள் ரயில்- புறநகர் ரயில் சேவை மறு உத்தரவு வரும்வரை பயன்பாட்டுக்கு வராது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருவதால் ரயில் சேவை மீண்டும் துவங்க வாய்ப்புள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. மீண்டும் ரயில் எப்போது ஓடும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் தற்போது இயக்கப்படாது என உறுதிபட தெரிவித்துள்ளது. அதேநேரம் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

மும்பை மாநகரை பொறுத்தவரை மாநில அரசின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி