அடிதூள்... தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது தெரியுமா.? அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்.

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2021, 9:56 AM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தல் பற்றி  சுகாதாரத்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் அறிவிப்பார்.என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.  

உள்ளாட்சித் தேர்தல் பற்றி  சுகாதாரத்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் அறிவிப்பார் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்களில்  தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்பதிவு செய்யும் இணையதள வசதியினை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி துணை ஆணையர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

சென்னையின் 15மண்டலங்களிலும் செயல்பட்டு வரும் தடுப்பூசி மையங்கள் தொடர்பான விவரம் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https//wwwchennaicorporation.govin/gcc/covid-details/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும்  மையங்களை தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்யும்போதே தடுப்பூசி செலுத்தப்படும் தேதி, நேரம் அறிவிக்கப்படும். மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். மேலும், 0444672 2200 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33544 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இணையதளத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கை காரணமாக சென்னையில் ஒரு நாளுக்கு 7000 ஆக இருந்த தொற்று தற்போது 400 ஆக குறைந்துள்ளது. மேலும் நோய் தொற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் பற்றி  சுகாதார அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் அறிவிப்பார்.சிங்காரச் சென்னை 2.0 தற்போதுதான் ஆளுநர் உரையில் தெரிவித்திருக்கிறார், இதைப் பற்றி முழு விவரம் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும்" என தெரிவித்தார்.  

click me!