கூட்டணியில் இருந்துகிட்டே குறுக்குசால் ஓட்டுறீங்களா..? ஒழுங்கா இருங்க... தப்பாயிடும்... பயங்கர கடுப்பில் பாஜக

By Thiraviaraj RMFirst Published Jan 17, 2022, 5:21 PM IST
Highlights

2005க்கு முன்பு இருந்ததைப் போல, மீண்டும் முதலமைச்சரின் இல்லம் கொலைகள், கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் மையமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை

பீகாரில் கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியை வரம்பிற்குள் இருக்குமாறு பாஜகவின் உயர்மட்ட மூத்த தலைவர்  எச்சரித்துள்ளார்.

பீகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. அவரின் நீண்ட பேஸ்புக் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் "ட்விட்டரில் எதிர்மறையான கருத்து பதிவிட்டு வருவதற்காக ஜனதா தள ஐக்கிய தலைவர்களை எச்சரித்துள்ளார்.

பிரபல நாடக ஆசிரியர் தயா பிரகாஷ் சின்ஹா, ​​மன்னர் அசோகர் குறித்த கருத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்று ஜேடியுவின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் நாடாளுமன்ற வாரியத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அசோகரை, முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்புக்கு இணையாக எழுதியதற்காக ஜெய்ஸ்வால் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.
சின்ஹாவைக் கைது செய்வதற்குப் பதிலாக, நிதிஷ் குமாரின் கட்சித் தலைவர்கள் விருதை திரும்பப் பெற வேண்டும் என்று ஏன் கேட்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். இது முன்பு நடந்ததில்லை என்று அவர் கூறினார்.

“இந்தத் தலைவர்கள் என்னையும், மத்திய தலைமையையும் ஏன் டேக் செய்து கேள்வி கேட்கிறார்கள்? நாம் அனைவரும் கூட்டணியில் இருக்க வேண்டும். இனி ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது. இந்த வரம்புக்கு முதல் நிபந்தனை என்னவென்றால், நீங்கள் ட்விட்டரில் கருத்து பதிவிடுவதை நிறுத்துங்கள். அவர் நாட்டின் பிரதமர். நீங்கள் கருத்து தெரிவிக்கிறோம் எனக்கூறி கேள்விகளை எழுப்பினால், பீகாரில் உள்ள 76 லட்சம் பாஜக தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். 

எதிர்காலத்தில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ளார். "விருதுகளை திரும்பப் பெறுமாறு பிரதமரைக் கேட்பதை விட முட்டாள்தனமான எதுவும் இருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் ஒன்றாக அமர்ந்து கருத்து வேறுபாடுகளைத் தகர்த்தெறிய முடியும். 2005க்கு முன்பு இருந்ததைப் போல, மீண்டும் முதலமைச்சரின் இல்லம் கொலைகள், கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் மையமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை" என அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உபேந்திர குஷ்வாஹா, "எங்கள் கோரிக்கையில் பின்வாங்க மாட்டோம், விருது திரும்பப் பெறும் வரை தொடருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.  

click me!