போலீஸ் மேல நம்பிக்கை இல்ல.. கடற்கரையில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை தாசில்தாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..

By Ezhilarasan BabuFirst Published Jul 19, 2021, 12:33 PM IST
Highlights

அதில் அனுமன் சிலையை மீது 1875 என்று வருடம் பொறிக்கப்பட்டுள்ளது, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அப்பகுதியில் உள்ள பைண்டி அம்மன் கோவில் உள்ளே வைத்து விட்டு, பொதுமக்கள் காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதிக்கு உட்பட்ட ஓடைக்குப்பம் பகுதி கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்ட 5 ஐம்பொன் சிலைகள் வருவாய்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட ஒரு அர்தநாரீஸ்வரர் சிலை, ஒரு பீடம், ஒரு அனுமர் சிலை மற்றும் 2 யானை சிலைகள் என மொத்தம் 5 ஐம்பொன் சிலைகளை சாஸ்த்ரி நகர் போலீசார் முன்னிலையில் பழண்டி அம்மன் கோவில் நிர்வாகத்தினர், வேளச்சேரி தாசில்தார் மணி சேகரிடம் ஒப்படைத்தனர். 

தமிழகத்தில் புராதன கோயில்களிலிருந்து ஏராளமான  சேர, சோழர் கால சிலைகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விலைமதிப்பில்லா செல்வங்களான அச்சிலைகளை மீட்பதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆதாரங்களுடன் சிலை ஒவ்வொன்றாக மீட்கப்பட்டும் வருகின்றன. அதேபோல் பல இடங்களில் கட்டிடம் கட்ட தோண்டப்படும் போதும், தூர்வாரும் பணிகள் நடைபெறும் போதும் புமிக்கடியில் புதைந்து கிடக்கும் புராதன சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்று மீட்கப்படும் சிலைகள் அதற்குரிய கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அந்தவகையில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஓடைகுப்பம் என்னும் ஓடை மாநகர் என்ற பகுதியில் கடற்கரையோரமாக 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிலைகள் கரையில் ஒதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிலைகளை மீட்டனர், அதில் ஒரு அர்த்தநாரீஸ்வரர் சிலை, ஒரு பீடம், ஒரு அனுமார் சிலை மற்றும் இரண்டு யானை சிலைகள் இருந்தன. அதில் அனுமன் சிலையை மீது 1875 என்று வருடம் பொறிக்கப்பட்டுள்ளது, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அப்பகுதியில் உள்ள பைண்டி அம்மன் கோவில் உள்ளே வைத்து விட்டு, பொதுமக்கள் காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தெரிந்து சாஸ்திரிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் பொதுமக்கள் அவர்களிடம் சிலைகளை கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து வேளச்சேரி தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.  5 ஐம்பொன் சிலைகளை சாஸ்த்ரி நகர் போலீசார் முன்னிலையில் பழண்டி அம்மன் கோவில் நிர்வாகத்தினர், வேளச்சேரி தாசில்தார் மணி சேகரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிலைகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

 

click me!