உங்க உடம்பை பார்த்துக்கோங்க.. ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. ஸ்டாலினுக்கு அட்வைஸ் கொடுத்த எம்ஜிஆரின் தீவிர விசுவாசி

By vinoth kumarFirst Published Jun 7, 2021, 1:30 PM IST
Highlights

நீங்கள் இரவும் பகலுமாக உழைக்கிறீர்கள்.  எனவே உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே அறிவுரை வழங்கியுள்ளார். 

நீங்கள் இரவும் பகலுமாக உழைக்கிறீர்கள்.  எனவே உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே அறிவுரை வழங்கியுள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிபிஈ கிட் அணிந்துகொண்டு கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது பல தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது. 

இந்நிலையில், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் எச்.வி.ஹண்டே.  இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்யும் பணிகளை பாராட்டி முன்னாள் அமைச்சர் ஹண்டே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கலைஞரின் பிறந்த நாள் பரிசாக சிறந்த அறிவிப்புகளை அறிவித்துள்ளீர்கள். அதேபோல் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை  கொரோனா நோயாளிகள் வார்டுக்கு நேரடியாக சென்று, அவர்களின் நலனை விசாரித்துள்ளீர்கள்.  

அதே கோவை அரசு மருத்துவமனையில் தான் கடந்த  94 ஆண்டுகளுக்கு முன் நான் பிறந்தேன். எனது தந்தை எச்.எம்.ஹண்டே அந்த மருத்துவமனையில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றியவர். ஜி.டி.நாயுடு மற்றும் அப்போதைய கோவை நகர தலைவராக இருந்த  ஆர்.எஸ். முதலியார் ஆகியோருக்கு குடும்ப மருத்துவராகவும் எனது தந்தை இருந்தார். நான் உங்களுக்கு ஒன்றை உறுதியாக சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்காக நீங்கள் இரவும் பகலுமாக உழைக்கிறீர்கள்.  எனவே உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். உங்கள் பணியில் வெற்றி  தொடர வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

click me!