இந்து மதத்தை இழிவுபடுத்த வேண்டாம்.. சூடாக்கிய விசிக நிர்வாகிகள்..! அதிர்ச்சி, அப்ஷெட்டில் திருமா..!

By Selva KathirFirst Published Oct 31, 2020, 9:09 AM IST
Highlights

ஏற்கனவே ஒரு முறை இந்துக் கோவில்களை  எல்லாம் இடித்துவிட்டு புத்த விகாரங்களையும், சமண மடங்களையும் கட்டிவிடலாமா என்று திருமாவளவன் பேசிய போதே அக்கட்சியின் நிர்வாகிகள் அதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே ஒரு முறை இந்துக் கோவில்களை  எல்லாம் இடித்துவிட்டு புத்த விகாரங்களையும், சமண மடங்களையும் கட்டிவிடலாமா என்று திருமாவளவன் பேசிய போதே அக்கட்சியின் நிர்வாகிகள் அதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

அண்மையில் பெரியார் தொடர்புடைய ஆன்லைன் கருத்தரங்கம் ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். இந்த கருத்தரங்கம் தனக்கு இத்தனை பெரிய தலைவலியை உருவாக்கும் என்று அப்போது திருமா யோசித்திருக்கமாட்டார். அந்த கருத்தரங்கில் பேசிய போது, பெண்கள் குறித்து மனு நூலில் கூறியுள்ள சில விஷயங்களை திருமா எடுத்துக்கூறினார். அதாவது பெண்கள் அனைவருமே விபச்சாரிகள் என்று மனு தர்மம் கூறுகிறது என்பது தான் திருமாவின் பேச்சு. மேலும் அப்போது இந்துப் பெண்கள் என்கிற வார்த்தையை உடன் சேர்த்துக் கொண்டார் திருமா.

கருத்தரங்கம் முடிந்து சுமார் நான்கு ஐந்து நாட்களுக்கு பிறகு இந்த விஷயத்தை கையில் எடுத்தது பாஜக. திருமாவளவன் தமிழ்ப்பெண்கள் அதிலும் இந்துப் பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்றும் பறத்தைகள் என்றும் கூறிவிட்டதாக சென்னையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் திருமா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உடனடியாக பாஜகவில் புதிதாக இணைந்த குஷ்பு கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து இந்துப் பெண்கள் என்றால் திருமாவிற்கு இலக்காராமா என்று கேள்வி கேட்டார்.

மேலும் இந்துப் பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று எப்படி திருமா கூறலாம், மனு தர்மத்தில் அப்படி ஒரு விஷயமே இல்லை என்று குஷ்பு போராட்ட களத்தில் குதித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் திருமாவிற்கு எதிராக களம் இறங்கினர். உடனடியாக விசிக பிரமுகர்களும் பாஜகவிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். ஆனால் உண்மையில் விசிக நிர்வாகிகள் பலரும் இந்த விஷயத்தில் திருமா மீது அதிருப்தி அடைந்ததாகவே சொல்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான போராட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்துக் கோவில்களை இடித்துவிட்டு கட்டிய மசூதிகளை இடிக்க வேண்டும் என்றால் முதலில் இந்துக் கோவில்கள் அனைத்தையும் இடித்துவிட்டு புத்த விகாரங்களையும், சமண மடங்களையும் தான் கட்ட வேண்டும் என்று பேசினார். அப்போது இந்துக் கோவில்கள் அனைத்தையும் இடிக்க வேண்டும் என்று திருமா பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் திருமாவின் விசிக நிர்வாகிகள் கூட தேர்தல் சமயத்தில் கோவில்களை இடிக்க வேண்டும் என்று பேசியது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

தற்போதும் அதே கேள்விகளை திருமாவை நோக்கி விசிக நிர்வாகிகள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். திருமாவிடம் மிகவும் கனிவாகவும் அதே சமயம் மிகவும் உரிமையுடன் இந்த கேள்விகளை அக்கட்சி நிர்வாகிகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்து மதத்தை பற்றியும், இந்து கோவில்களை பற்றியும் மட்டுமே நாம் பேசி ஏன் சர்ச்சையில் சிக்க வேண்டும் என்பது தான் நிர்வாகிகளின் கேள்வியாக உள்ளது. சில நிர்வாகிகள் தொலைபேசி மூலம் அழைத்து இந்துப் பெண்களை பற்றி நீங்கள் பேசியதால் நம் கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர் என திருமாவிடம் சொல்லியுள்ளனர்.

இன்னும் சிலரோ இனி இப்படி பேச வேண்டாம் அண்ணா என்று உரிமையுடன் முகத்திற்கு நேராகவே திருமாவிடம் சொல்லி வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருமா மிகவும் அப்செட்டாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறார். வழக்கமாக செய்தியாளர்களிடம் பேசும் போது மிகவும் பொறுப்பாக பேசும் திருமா நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது நாய், பேய் என்கிற வார்த்தைகளை எல்லாம் பயன்படுததினார். போதாக்குறைக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவன், இவன் என ஒருமையிலும் திருமா பேசியுள்ளார்.

வழக்கமாக தலைவர் இப்படி பேசமாட்டாரே? என்ன ஆகிவிட்டது என்று தொண்டர்கள் ஒரு பக்கம் குழம்ப, பெண்கள் விபச்சாரிகள் விஷயம் பூமராங் ஆகி விசிக நிர்வாகிகளையே டென்சன் ஆக்கியது தான் காரணம் என்கிறார்கள்.

click me!