பதிவியை ஊர்ந்து, நகர்ந்து, நடந்து சென்று வாங்கக்கூடாது. தகுதி அடிப்படையில் வாங்க வேண்டும். கேஎஸ் அழகிரி அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Mar 20, 2021, 12:52 PM IST
Highlights

அதிமுகவால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியவில்லை. நீட், இயற்கை பேரிடர் என மத்திய அரசிடம் உதவியையும், அனுமதியையும் பெற முடியவில்லை என்ற அவர், அதிமுக அமைச்சர்கள், அரசை நம்பி மோடி அரசாங்கம் எந்த சிறப்பு நிதியும் தமிழகத்திற்கு வழங்கவில்லை என கூறினார். 

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில்  தேர்தல் பரப்புரைக்காக மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், மல்லிகா அர்ஜூன கார்கே, சித்தராமையா, 
பிரியங்கா காந்தி, உள்ளிட்ட அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து இருப்பதாக தெரிவித்தார். தேர்தலின் முக்கிய நோக்கம் தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்ற அவர்,  மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால் தமிழகத்தை தமிழகம் ஆளும் என்றார். 

அதிமுகவால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியவில்லை. நீட், இயற்கை பேரிடர் என மத்திய அரசிடம் உதவியையும், அனுமதியையும் பெற முடியவில்லை என்ற அவர், அதிமுக அமைச்சர்கள், அரசை நம்பி மோடி அரசாங்கம் எந்த சிறப்பு நிதியும் தமிழகத்திற்கு வழங்கவில்லை என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என கூறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை நிலையை தூக்கியெறிய பாஜக முயல்கிறது. சமஸ்கிருதத்திற்கு 300கோடியும், செம்மொழியான தமிழுக்கு மிக குறைவான தொகை ஒதுக்கியுள்ளது. விசாரணைக்கு அஞ்சி அதிமுக மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதில்லை என்றார். நம்முடைய பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம் எனவும், வங்கிகளை தனியார் ஆக்க  கூடாது என்றார். அதற்காக வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தார். 

காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய முயல்கின்றனர். ஆனால், துறைமுகத்தில் 55%சதவீத இடங்களில் பணிகள் செய்யப்படாமல் இருக்கிறது. பலநூறு கிராமங்களை அகற்றி விரிவாக்கம் செய்ய அவசியம் இப்போது இல்லை என்றார். முதல்வர் பதவியை நடந்து சென்று தான் வங்கியதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதிலளித்த அவர், பதவியை ஊர்ந்து, நகர்ந்து, நடந்து சென்று வாங்க கூடாது தகுதியின் அடிப்படையில் தான் பதவிக்கு வர வேண்டும் எனறார். 

நாங்குநேரியில் எனது கண்ணால் அதிமுக வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்தேன். சேப்பாக்கம் தொகுதியில் பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியானது.  அரசியலுக்காக மட்டுமே இருப்பவர்கள் அரசியலில் இருப்பார்கள். அரசியலில் லாபம் பார்ப்பவர்கள் அரசியலை விட்டு வெளியேறுவர் என தெரிவித்தார்.
 

click me!