யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்... தைரியமாக தடுப்பூசியை போட்டு கொள்ளுங்கள்.. சுகாதாரத்துறை அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Mar 19, 2021, 3:36 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். 

கொரோனா தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பு மருந்தை செலுத்தி கொள்வதில் சிலர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக மக்களவையில் பேசிய  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்;- கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகிறது. அது தேவையற்றது. கொரோனா தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

click me!