கொரோனா வைரஸை விரட்ட உங்கள் வீட்டில் இதை செய்யுங்க... எஸ்.வி.சேகர் சொன்ன சூப்பர் ஐடியா..!

Published : Mar 25, 2020, 01:15 PM IST
கொரோனா வைரஸை விரட்ட  உங்கள் வீட்டில் இதை செய்யுங்க... எஸ்.வி.சேகர் சொன்ன சூப்பர் ஐடியா..!

சுருக்கம்

அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. 

சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் வைரஸ் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்படும். இதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பல்வேறு இடங்களில், கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல் மக்கள் அலட்சியமாக உள்ளனர். தேவையின்றி சாலைகளில் நடமாடுவதை காண முடிகிறது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் கூட்டமாக பொருட்கள் வாங்கும் மக்களையும், வியாபாரிகளையும் போலீசார் விரட்டியடித்துள்ளனர். இந்நிலையில், நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர், ‘அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள். இந்த மந்திர சப்தம் வீட்டில் ஒலிக்கட்டும்’’ என ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

 


 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!