ஒரு ஓட்டில் வென்ற திமுக..! இறுதி வரையில் நீடித்த பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Jan 11, 2020, 5:43 PM IST
Highlights

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திமுக ஒரு ஓட்டில் வெற்றி பெற்றுள்ளது. 21 உறுப்பினர்கள் கொண்ட நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 பேர் திமுகவினர், 5 பேர் அதிமுகவினர், 2 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மற்றவை ஒன்று ஆகும். இதனிடையே இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தமிழ் செல்வன் 11 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. அதில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. காலை தொடங்கிய தேர்தலின் முடிவுகள் நண்பகல் முதல் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

ஆளும் கட்சியான அதிமுக தொடக்கம் முதலே பல இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. தற்போது வரையிலும் அக்கட்சி 150 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றி இருக்கிறது. திமுக 135 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு இடங்களிலும் சுயேட்சைகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திமுக ஒரு ஓட்டில் வெற்றி பெற்றுள்ளது. 21 உறுப்பினர்கள் கொண்ட நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 பேர் திமுகவினர், 5 பேர் அதிமுகவினர், 2 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மற்றவை ஒன்று ஆகும். இதனிடையே இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தமிழ் செல்வன் 11 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இரண்டு திமுக உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்து இருக்கின்றனர். அதிமுக வேட்பாளர் ஜெயசித்ரா 10 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் திமுக வேட்பாளர் ஒரு வாக்கில் வென்றுள்ளார்.

click me!