ட்ரெய்லரில் ஜெயிக்கும் திமுக... மெயின் பிக்சருக்கு தயாராகும் அதிமுக... திடீர் திருப்பம் நிகழுமா..?

By Thiraviaraj RMFirst Published Apr 30, 2021, 1:34 PM IST
Highlights

மீண்டும் 2016 நிலவரமே தமிழகத்தில் வரும். எக்ஸிட் போலை நம்பவேண்டா என ஓ.பி.எஸும், எடப்பாடியாரும் அதிமுக வேட்பாளர்களை தேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. 

தமிழக சட்டமன்றத்தேர்தல் குறித்து தேர்தலுக்கு பிறகான எக்ஸிட்போல் கருத்து கணிப்பில் திமுக அதிக பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது வெறும் ட்ரெய்லர், மெயின் பிக்சர்தான் பதில் சொல்லும் என அதிமுக முக்கிய பிரமுகர் கோவை சத்யன் கருத்து தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 6ம் தேதி தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வங்கம் அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதுவரை மற்ற மாநிலங்களில் எக்ஸிட் போல், அதாவது தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகான கருத்துக் கணிப்பை வெளியிடக்கூடாதென தேர்தல் ஆணையம் ஆணையிட்டு இருந்தது. 

இந்நிலையில் நேற்று மாலை 7 மணி வாக்கில் ரிபப்ளிக் டிவி, சி.என்.எக்ஸ், சி-வோட்டர்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிமுக 60 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று எதிர்கட்சி வரிசையில் நிற்கும் என்றும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன.  இதனால், திமுக தித்திப்பில் கதகளி ஆடி வருகின்றன.

ஆனால், கடந்த 2016ம் ஆண்டு சி.வோட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக 170 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாக மாறி மீண்டும் அதிமுகவே அட்சிக்கு வந்தது.

இந்நிலையில், கருத்துக் கணிப்பால் நொந்துபோயுள்ள அதிமுகவினருக்கு தெம்பூட்டும் வகையில், அக்கட்சின் பிரமுகரான கோவை சத்யன் தனது ட்விட்டர் பதிவில், ‘’ட்ரெயிலர் வேற படம் வேற, இது போ ல் தான் கருத்து கணிப்புகள். இன்று வெளிவந்த கருத்து கணிப்பு ட்ரெயிலர், மே 2 படம் ரிலீஸ் ஆகும் போது தெரியும்..’’ எனக் கூறியுள்ளார்.மீண்டும் 2016 நிலவரமே தமிழகத்தில் வரும். எக்ஸிட் போலை நம்பவேண்டா என ஓ.பி.எஸும், எடப்பாடியாரும் அதிமுக வேட்பாளர்களை தேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. 

ட்ரெயிலர் வேற படம் வேற, இது போல் தான் கருத்து கணிப்புகள். இன்று வெளிவந்த கருத்து கணிப்பு ட்ரெயிலர், மே 2 படம் ரிலீஸ் ஆகும் போது தெரியும்..

— Kovai Sathyan (@KovaiSathyan)

 

click me!