2021-ல் திமுக வலுவான வெற்றி பெற உதவுவோம்... பிரசாந்த் கிஷோர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Feb 2, 2020, 6:34 PM IST
Highlights

 “வருகிற 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இந்தியன் பி.ஏ.சி. (இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி) அமைப்புடன் இணைந்து திமுக சந்திக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர்களின் உதவியுடன், தமிழகம் முன்பு பெற்றிருந்த பொலிவை மீண்டும் பெறுவதற்கான நம்முடைய திட்டங்கள் வடிவம் பெறும்” என ஸ்டாலின்  தெரிவித்திருந்தார்.
 

2021-ம் ஆண்டில் தமிழகத்தில் திமுக வலுவான வெற்றியைப் பெற உதவுவோம் என்று தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் அறிவித்துள்ளது. 
திமுகவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக சுனில் தலைமையிலான ஓ.எம்.ஜி. நிறுவனம் பணியாற்றிவந்தது. தேர்தல் வியூகம் வகுப்பது, மு.க. ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவது எனப் பல பணிகளை இந்நிறுவனம் செய்துவந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு, சுனிலின் ஓ.எம்.ஜி. நிறுவனத்தை திமுக கழற்றிவிட்டது. தேர்தல் வியூக மன்னரான பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பிஏசி (ஐ-பேக்) நிறுவனத்துடன் செயல்படப்போவதாக செய்திகள் வெளியாகிவந்தன.


இந்நிலையில்  பிரசாந்த்கிஷோரின் இந்தியன்பிஏசி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “வருகிற 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இந்தியன் பி.ஏ.சி. (இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி) அமைப்புடன் இணைந்து திமுக சந்திக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர்களின் உதவியுடன், தமிழகம் முன்பு பெற்றிருந்த பொலிவை மீண்டும் பெறுவதற்கான நம்முடைய திட்டங்கள் வடிவம் பெறும்” என ஸ்டாலின்  தெரிவித்திருந்தார்.


மு.க. ஸ்டாலின் இந்தப் பதிவை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் பதிவில், “இந்த வாய்ப்பினை வழங்கிய மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவுடன் திமுக வெற்றி பெற நாங்கள் பங்களிப்போம்.  உங்களது திறமையான தலைமையில், தமிழகம் மீண்டும் வளர்ச்சி மற்றும் வளம் சார்ந்த பாதையில் பயணிக்க எங்கள் அணி ஆர்வமுடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளது. என்றும் தெரிவித்து உள்ளது.

click me!