தெய்வத்துக்காக எந்த விமர்சனத்தையும் திமுக எதிர்கொள்ளும்.. அமைச்சர் சேகர்பாபு சரவெடி..!

Published : Sep 25, 2021, 03:52 PM IST
தெய்வத்துக்காக எந்த விமர்சனத்தையும் திமுக எதிர்கொள்ளும்.. அமைச்சர் சேகர்பாபு சரவெடி..!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணிகள் நடைபெறும்.கோவில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார். நகைகளை உருக்கும் நடவடிக்கையில் எந்தவித லாப நோக்கும் இல்லாமல் நேர்மையாக, உண்மையாக, தூய்மையாக அரசு செயல்படும் என்றார்.

நகைகளை உருக்கும் நடவடிக்கையில் எந்தவித லாப நோக்கும் இல்லாமல் நேர்மையாக, உண்மையாக, தூய்மையாக அரசு செயல்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்து, வீர வசந்தாராயர் மண்டப புனரமைப்பு பணிகளையும் இந்து  அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுக்கப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளன. அதில், தெய்வங்களுக்கு பயன்படுவதை நேரடியாக பயன்படுத்தவும், பயன்படுத்த இயலாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதியை கோவில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணிகள் நடைபெறும்.கோவில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார். நகைகளை உருக்கும் நடவடிக்கையில் எந்தவித லாப நோக்கும் இல்லாமல் நேர்மையாக, உண்மையாக, தூய்மையாக அரசு செயல்படும் என்றார்.

மேலும், குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் ஒன்று கூட கடந்த ஆட்சியில் மீட்கப்படவிலை. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!