திருமாவை கைகழுவினால் என்ன ஆகிடப்போகிறது!: பா.ம.க.வுக்கு பாதை போடும் ஸ்டாலின்?

By sathish kFirst Published Nov 25, 2018, 2:16 PM IST
Highlights

தி.மு.க. அமைக்க இருக்கும் கூட்டணிக்குள் களேபரம் நடந்து கொண்டேதான் இருக்கிறது, ஸ்டாலினுக்கும் - திருமாவளவனுக்கும் இடையில் பெரும் விரிசல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது! என்பதை  ஏஸியாநெட் தமிழ் ஏற்கனவே ஆதாரங்களுடன் அவதானித்து கூறியுள்ளது.

அதை இப்போது பக்காவாக உறுதி செய்துள்ளனர் திருமாவளவனும், துரைமுருகனும். கடந்த சில நாட்களுக்கு  முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ‘நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதைன் அவர்கள்தான் தெரியப்படுத்த வேண்டும்.’ என்று கூறினார். இது அரசியலரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கோயமுத்தூரில் இந்திராகாந்தி  நூற்றாண்டுவிழா துவக்க நிகழ்வு மேடையில்  அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி. தவிர மற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களும் குழுமியிருந்த மேடையில் ‘ஸ்டாலினை முதல்வராக்குவோம்’ என்று முழங்கிய திருமா, இப்போது இப்படி பேசியதென்பது இருவருக்கும் இடையில் இன்னும் ஒட்டா நிலை தொடர்வதையே காட்டுகிறது. கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினுக்கு திருமாவை ஆகாது. இப்போது அப்பா இல்லாது போய்விட்ட நிலையில்  அறவே வெறுக்கிறார் திருமாவை! என்கிறார்கள்.

திருமா எவ்வளவோ இறங்கி வந்தும் கூட ஸ்டாலின் அவரை மதிப்பதில்லை! என்பது விடுதலை சிறுத்தைகள் தரப்பு கோபம். ஆனால் தி.மு.க.வோ, தமிழகத்தில் கூட்டணியின் தலைவராக ஸ்டாலின் இருக்கையில் திருமாவோ ராகுல், சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து தனி லாபி செய்து கொண்டிருக்கிறார். இது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை! இதுவே தி.மு.க.வின் ஆத்திரம். ஆக ஆத்திரமும், - கோபமும் மோதிக்கொண்டதன் விளைவாக விரிசல் இன்னமும் அதிகமாகி, வெடித்து அது வெளியே தெரிந்துவிட்டது. 

இந்நிலையில் இந்தப் பிரச்னையை மேலும் விஸ்வரூபமெடுக்க செய்யும் விதமாக துரைமுருகனோ “ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிருத்தைகள் இப்போது எங்கள் கூட்டணியில் இல்லை. அவர்கள் எங்கள் நண்பர்கள் அவ்வளவே. அவர்களுடன் இன்னும் கூட்டணி அமைக்கவில்லை.” என்று பெரிய சைஸ் வெடி ஒன்றை போட்டுத்தாக்கியிருக்கிறார். இதற்குப் பிறகு ஸ்டாலினை நோக்கிய விடுதலை சிறுத்தைகளின் பார்வை உக்கிரமாகியுள்ளது. 

இதற்கிடையில் திருமாவை கைகழுவிவிட்டு, பா.ம.க.வை உள்ளே இழுத்தால் என்ன? எனும் அஜெண்டாவும் தி.மு.க.வினுள் ஓடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். திருமாவை விட மிக அதிகமாக அன்புமணியைதான் ஸ்டாலின் வெறுக்கிறார்.

ஆனாலும், இது சட்டமன்ற தேர்தல் இல்லை, அதில்தான் இருவருக்குள்ளும் ‘யார் முதல்வர் வேட்பாளர்’ எனும் மோதல் வரும். இது டெல்லி தொடர்பான தேர்தல் என்பதால் பா.ம.க.வை இழுக்கலாமே! என்பது தி.மு.க.வின் மேல் வட்டாரத்தின் கருத்து.

ஆனாலும் பா.ம.க.வை உள்ளே இழுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. திருமா அளவுக்கு ஒன்று அல்லது இரண்டு சீட்கள் மட்டும் வாங்கிவிட்டு  திருப்திப்பட மாட்டார்கள்!  இன்னொன்று விடுதலை சிறுத்தைகள் போல் தமிழகம் முழுவதும் பரந்துப்பட்ட வாக்கு வங்கியென்பது பா.ம.க.வுக்கு இல்லை! 
இதையும் யோசிக்கிறார் ஸ்டாலின்.

click me!