டி.ராஜாவுக்காக நாகையை பெற்றுக்கொடுத்த திமுக... மாநிலங்களவை எம்.பி, மக்களவை எம்.பி ஆவாரா..?

By Thiraviaraj RMFirst Published Mar 14, 2019, 2:07 PM IST
Highlights

டெல்லி தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் நாகபட்டினம் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 

டெல்லி தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் நாகபட்டினம் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கக் கூடிய தொகுதிகளில் நாகையும் ஒன்று. கம்யூனிஸ்டு தோழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. இங்கு வசிக்கும் முஸ்லீம்கள் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள். இந்தத் தொகுதியை கேட்டு திமுகவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இறுதி வரை போராடி வந்தது. ஆனால், டி.ராஜாவை மனதில் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். 

தனித் தொகுதியான நாகை, தொகுதியில் விவசாய தலித் சமூதாயத்தை சேர்ந்த வாக்காளர்களும், மீனவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சமூதாயத்தினர் உள்ளனர். ஆகையால், அங்கு டி.ராஜாவை நிறுத்தினால் வெற்றி உறுதி. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள டி.ராஜா டெல்லியில் அனைத்து தேசிய கட்சி தலைவர்களுடனும் நட்புடன் இருப்பவர். எவரையும் எளிதில் அணுகக்கூடியவர். முதிர்ந்த அரசியல்வாதி. ஆகையால், அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன் வந்துள்ளார் ஸ்டாலின். மக்களவைக்கு அனுப்பி டெல்லியில் சில தொடர்புகளை ஏற்படுத்தி லாபியை அதிகரித்துக் கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதேபோல் திமுகவுடன் எப்போதும் நட்புபாராட்டி வருபவர் டி.ராஜாக். திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என வழக்குத் தொடுத்த மூவரில் டி.ராஜாவும் ஒருவர். இதையெல்லாம் மனதில் கொண்டே நாகையை டி.ராஜவுக்கு ஸ்டாலின் பெற்றுக் கொடுத்துள்ளார்.  

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாகையில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிட்டது. இதில்  அதிமுக வேட்பாளரான கே.கோபால் வெற்றிபெற்றார். நாகை மக்களவை தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. மாநிலங்களவை உறுப்பினரான டி.ராஜா எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காதவர், கரைபடியாதவர் என்பதால் இம்முறை மக்களவைக்கு செல்வது உறுதி என்கிறார்கள். 

click me!