மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கேட்டு வழக்கு – திமுகவின் மனு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 05:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கேட்டு வழக்கு – திமுகவின் மனு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

சுருக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தக்கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19ம் தேதிகள் 2 கட்டமாக நடைபெற இருந்தது.

இதற்காக தேர்தல் பணிகளில்  அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனக்கோரி தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.  

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?