செருப்பு போட்டு வள்ளலார் மடத்துக்கு சென்ற திமுக -விசிக விஐபிகள்... அடுத்தடுத்து அவமானம்..!

Published : Aug 04, 2020, 04:38 PM IST
செருப்பு போட்டு வள்ளலார் மடத்துக்கு சென்ற திமுக -விசிக விஐபிகள்... அடுத்தடுத்து அவமானம்..!

சுருக்கம்

விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சன்மார்க்க சங்கம் சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதித்துள்ள ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அத்தியாவசிய நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சியை திமுக எம்எல்ஏ பொன்முடி அவமதித்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி 1000 பேருக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை கொண்ட தொகுப்பு பொருட்களை வழங்கினார்.

இதில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு பஞ்சநாதன், மாணவரணி அமைப்பார் ஸ்ரீவினோத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வள்ளலாளர் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி அண்ணாமலை செய்திருந்தார்.

ஆனால், நல்ல செயலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் காலில் செருப்பு அணிந்து வந்து வள்ளலாரையும் அவரின் பக்தர்களையும் அவமதித்துவிட்டதாக  கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்களின் தலைமைக்கு தான் அடிப்படை நாகரிகம் தெறியவில்லை பார்த்தால் இவர்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட தெறியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி