பா.ம.க.,வை இழிவுபடுத்தும் தி.மு.க... முரசொலி வெளியிட்ட வன்மக் கட்டுரை..!

By Thiraviaraj RMFirst Published Jan 13, 2021, 3:35 PM IST
Highlights

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸை, தி.மு.க.,வை சேர்ந்த முரசொலி பத்திரிகை மூலம் இழிவுபடுத்தி வருவதற்கு வன்னியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸை, தி.மு.க.,வை சேர்ந்த முரசொலி பத்திரிகை மூலம் இழிவுபடுத்தி வருவதற்கு வன்னியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நடவடிக்கையில் தி.மு.க இறங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி 2016-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. நாடாளுமன்ற தேர்தல் அதனை தொடர்ந்து வந்த இடைத் தேர்தல்களில் பா.ம.க- அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று வருவதை கொஞ்சமும் பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க, தொடர்ந்து பா.ம.க நிறுவனரை விமர்சனம் செய்து வந்தது.

வரும் சட்ட மன்ற தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்கும் என்ற நிலையில் தற்போது மீண்டும் ராமதாஸை இழிவுபடுத்தும் செயலில் தி.மு.க இறங்கியுள்ளது. முரசொலி பத்திரிக்கை மூலம் கடந்த இரண்டு நாட்களாக ராமதாஸ் குறித்தும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையை இழிவுபடுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.

தி.மு.க.,வின் முரசொலி பத்திரிக்கையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து கேலி சித்திரத்துடன், பாட்டாளி சொந்தம் என்ற பெயரில் ராமதாஸை இழிவுபடுத்தும் விதமாக “வன்னியர்களுக்கான இடஒதுகீட்டிலிருந்து தற்போது பின் வாங்குவது ஏன்” என்ற கேள்வியுடன் கட்டுரை வெளியாகியுள்ளது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு முற்றிலும் மாறாக, ராமாதாஸ் இடஒதுகீட்டு கோரிக்கையிலிருந்து பின் வாங்குவதாக தி.மு.க திட்டமிட்டு ராமாதாஸிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதுடன் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக வன்னியர் சமுதாய மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர தி.மு.க மறைமுக பேச்சு வார்த்தை நடத்தியது. இதற்கு பா.ம.க ஒப்புக் கொள்ளாததால் தி.மு.க தற்போது பா.ம.க., மீது சேற்றை வாரி இறைத்து வருகிறது.

click me!