ரஜினியை தூண்டும் திமுக அனுதாபிகள்... உளவுத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..!

Published : Oct 24, 2020, 04:01 PM IST
ரஜினியை தூண்டும் திமுக அனுதாபிகள்... உளவுத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..!

சுருக்கம்

ரஜினிக்குத் தரப்படும் இந்த அறிவுறுத்தலின் பின்னால் தி.மு.க இருப்பதாக உளவுத்துறை கூறுகிறது. அதற்குக் காரணம், அந்த அமெரிக்கா நண்பர் ரஜினிக்கு மட்டுமல்ல; தி.மு.க தலைமைக்கும் மிக நெருக்கமானவர்’’என்கிறார்கள். 

விஜயதசமிக்கு ரஜினி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுக்கிறார் என தகவல்கள் பரபரக்கும் நேரத்தில், அரசியல் வேண்டாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை சொல்லி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.  

25 ஆண்டுகளாக அதோ வருகிறேன்... இதோ வருகிறேன் என போக்குக்காட்டிக் கொண்டிருந்த ரஜினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் சிஸ்டத்தை சரிசெய்ய வருவதாக அறிவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும், கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை விஜயதசமி நாளில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தனது கொள்கைகளை 50 வீடியோக்களாக தொகுத்து ஒவ்வொன்றாக வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரஜினிக்கு நெருக்கமான அமெரிக்க நண்பர் ஒருவரும், ரஜினியின் குடும்ப டாக்டர் ஒருவரும் அவரிடம், உங்கள் உடல்நிலை ரொம்ப முக்கியம். அதோடு, டென்ஷனான அரசியல் சூழல்களால் உங்க இயல்பான- அன்பான- அமைதியான மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படும் என ஆலோசனை கூறி வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. 

 அதேபோல் சென்னையிலுள்ள ரஜினியின் நீண்ட கால நண்பர் அமலநாதனும் இதையே ரஜினியிடம் அறிவுறுத்தி இருக்கிறார் என்கிறார்கள். அதே நேரம், ரஜினிக்குத் தரப்படும் இந்த அறிவுறுத்தலின் பின்னால் தி.மு.க இருப்பதாக உளவுத்துறை கூறுகிறது. அதற்குக் காரணம், அந்த அமெரிக்கா நண்பர் ரஜினிக்கு மட்டுமல்ல; தி.மு.க தலைமைக்கும் மிக நெருக்கமானவர்’’என்கிறார்கள். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி