எதுகை மோனையில் பேசும் எங்கள் தமிழிசை... இலக்கிய செல்வரின் மகளல்லவா... தமிழிசையை கலாய்த்த திமுக ஆதரவாளர்...

Asianet News Tamil  
Published : Feb 14, 2018, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
எதுகை மோனையில் பேசும் எங்கள் தமிழிசை... இலக்கிய செல்வரின் மகளல்லவா... தமிழிசையை கலாய்த்த திமுக ஆதரவாளர்...

சுருக்கம்

DMK supporters condemned tamilisai speech

இது பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண்.. இது அண்ணா மண் அல்ல ஆண்டாள் மண்.. 
என எதுகை மோனையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசியதற்கு திமுக ஆதரவாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

இது பெரியார் மண் அல்ல
பெரியாழ்வார் மண்..
இது அண்ணா மண் அல்ல
ஆண்டாள் மண்.. 
எங்கள் தமிழிசை..
இலக்கிய செல்வரின் மகளல்லவா..
எதுகை மோனையில் பேசுகிறார்.. நன்று..
இங்கே பெரியாழ்வாரை யாருக்கெல்லாம் தெரியும் .. புத்தகத்தில் படித்ததோடு சரி மறந்து போனவர்கள் தான் அதிகம்.. பாவம் ஆண்டாள்.. சிலர் மட்டுமே அறிந்திருந்த அவரை..? ஊர்பேசி வைத்தது போதாதென்று .. அச்சு முறிந்த தேர் இழுக்க வருகிறார் ..தமிழிசை..
..
இது பெரியார் மண் இல்லையாம் மறைந்து நாற்பத்திநான்கு ஆண்டு கழித்து இன்னமும் சிலர் வயிறு கலக்குகிறதே.. பெரியாரை பேசாமல் பொழுது விடிவதல்லையே .. இன்றைக்கு தாமரை போட்ட ரவிக்கையோடு வலம் வரமுடிகிறதே.. பார்த்தாலே தீட்டென்ற சமுகத்தில் பிறந்து .. இன்று ஒரு கட்சி தலைவராக வலம் வருகிறீர்களே.. பனை மரத்து கீழே பாப்பான் நடந்துபோனால்.. மரத்தில் இருப்பவர் மரத்தை தட்டி ஓசை எழுப்பவேண்டும் அப்போது தான் அவன் நிழல் மேலே படாமல் ஒதுங்கி செல்வார் அந்தனர்.. இதையெல்லாம் மாற்றதான் பெருங்கிழவன் பாடதபாடுபட்டார்..
ராஜாஜி குடும்பத்திலேயே அவரால் மறுமணமென்ற புரட்சியை செய்ய முடிந்தது பால்ய விவாகத்தை சட்டவிரோதமாக்க முடிந்தது.. யாருக்கும் நீ அடிமையில்லென்று .. மானத்தோடு உரிமைக்கு போராட சொன்னவர் 
தீண்டாமை சாதி அடுக்கு மதம் கடவுள் என்ற கட்டுகதைதளை சொல்லி ஏமாற்றுகிற கூட்டம்.. இதையெல்லாம் எதிர்த்தார் 
அதனால் தான் காலமாய் தமிழகத்தின் காலமாய்என்று ஜொலிக்கிறார்.. 
அண்ணா.. அறிஞர் திராவிட அரசியல் தேரின் அச்சாணி எழுத்தில் பேச்சில் செயலில் தமிழனுக்கு பெருமை சேர்த்த பெருமகன் அவரின் அரசியல் ஆளுமை முன் முட்டிபோட கூட சில மூதர்களுக்கு முடியாமல் போனது ..
பேராசான் பெருங்கிழவன் சிந்தனையில் உதித்ததை செயல்படத்தான் ஆட்சி ஏறியவுடனேயே பெரியாருக்கு காலடியில் வைக்கிறேன் என்றார்.. காலம் அவருக்கு வழங்கிய வாய்ப்பில் நின்று .. தமிழ்நாடென்று பெயர்மாற்றம் ..சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கினார்.. அவருக்கு பிறகு பதவியேற்ற கிழவனின் நேரடி சீடர்.. திராவிட பெருவுடையார் கலைஞர் பேரறிஞரின் இதயத்தை இரவலாக பெற்று ..
ஆற்றிய அளப்பரிய பணிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.. ஒரேஒரு நிகழ்வு போதும் 
இன்றைக்கு பாஜக போட்ட பட்ஜெட்..( நிதிநிலை அறிக்கையை) ஊரே /நாடே சொன்னது தி.மு.க செயல்படுத்தியதை தான் இந்தியாவிற்கு கொண்டுவருகிறார்கள் .. இருபது வருடங்களுக்கு முன்பு தமிழகம் வளர்ந்தவிதத்தை நாடே அறிந்து நின்றது..
..
திராவிடன்.. பெயரை கேட்டாலே கோபம் வருகிறதா வரவேண்டும் இன்னமும் உம்மை போல் சுரணையற்ற ஜடங்களை திருத்துவரை திராவிடம் என்ற சொல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. பார்பன அடிமைகளே கேளுங்கள் என்னதான் வீரமாய் பேசி திரிந்தாலும்..
ஒரு படி கீழேதான்.. தெய்வம் பக்தி வேதமென பயமுறித்தி அறிவு கொண்டு சிந்திக்காமல் வைத்திருப்பதிலேயே ஒரளவு வெற்றிப்பெற்றிருக்கிறது பார்ப்பனீயம் ..
என்னதான் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து உழைத்தாலும் பலனென்னவோ அவாளுக்குதான் தமிழிசை.. கடைசியில் நின்று கொண்டே இருக்கவேண்டும் .. உங்களை போன்றோரை குனியவைத்து படியேறி போய்கொண்டே இருக்கிறார்கள்..அறியாமல் வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்..
..
பெண் என்பதால் ஜெயாவை ஆதரித்தாக விஜயதாரணி சொன்னார் ஏறக்குறைய இதே சொல்லை தமிழிசையும் ஒருமுறை பயன்படுத்தியிருந்தார்.. பெண் ஆளுமை என்பதால் விமர்சனம் செய்யபடுவதாக.. உண்மையில் பெண் ஆளுமைகள் என்பதால் தான் பெரியாரிய வழியை தேர்ந்தெடுத்தவர்கள் நியாயமாக அன்றி விமர்சிப்பதில்லை மென்மையான போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறோம்.. சோனியாவை பதிபக்தியில்லாதவர் என்ற போதுகூட ஜெயாவை தனிப்பட்டமுறை தாக்கியதில்லை அரசியல் ரீதியான விமர்சனங்கள் எங்கள் இனத்தின் மீதான தாக்குதலாய் மொழி கலாச்சார பண்பாட்டு மீதான தாக்குதலாய்..
மக்களின் அறியாமையை களமாக்க நினைக்கிற போதெல்லாம் திருப்பி தாக்குகிறோம் எதிர்நிற்பவரின் கருத்தியலோடே தவிர.. பாலினத்தோடல்ல..ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் 
எதிர்கொள்ளும் சவால்களை எண்ணி சிலநேரம் அவர்களின் திமிரை கூட ரசிக்கிறோம்.. ஆனால் கேனத்தனத்தை அல்ல.. தமிழிசையிடம் இருப்பது ஆளுமையல்ல.. அறிவிலித்தனம்.. அது மாறவேண்டும்.. குமரியில் விளைந்த பயிர் களையாய் போகாமல் வேண்டும். என இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும்.. தலைமை வேஸ்ட்.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஜோதிமணி!
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!