திமுகவில் உருவாகியுள்ளது புயல்... பெயர் என்ன தெரியுமா? அதிமுக செய்திதொடர்பாளர் கிண்டல்!

By vinoth kumarFirst Published Aug 13, 2018, 4:52 PM IST
Highlights

வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. திமுகவில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ‘அழகிரி’ என்று பெயர் வைக்கலாம் என வைகைச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.

வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. திமுகவில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ‘அழகிரி’ என்று பெயர் வைக்கலாம் என வைகைச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு முதல்முறையாக திமுக செயற்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. 

இந்த செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி இருந்த போது திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் மறுபுறம் எதிர்ப்புக்களும் இருந்து வருகிறது. 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தந்தையிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்துக்கொண்டேன் என்றார். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. அதை காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். கட்சி ரீதியிலான எனது ஆதங்கத்தை இன்னும் 3 நாட்களில் தெரிவிப்பேன் என்று கூறி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து திமுக கட்சியில் பிளவு ஏற்படும் என்று பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. வைகைச்செல்வன் கேலி செய்துள்ளார். வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. திமுகவில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ‘அழகிரி’ என்று பெயர் வைக்கலாம் என வைகைச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார். 

click me!