அவங்க 2 பேரும் செம்ம பீதியில் இருக்காங்க... பகீர் கிளப்பும் தினகரன்!

Published : Oct 08, 2018, 11:04 AM ISTUpdated : Oct 08, 2018, 11:07 AM IST
அவங்க 2 பேரும் செம்ம பீதியில் இருக்காங்க... பகீர் கிளப்பும் தினகரன்!

சுருக்கம்

வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் தெரித்திருக்கிறார்.

வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் தெரித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளும் கட்சியினர், குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஒருபுறம். 

இடைத்தேர்தலுக்கு தயாராகிக் கொண்டே மழையை காரணம் காட்டி, இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான வேலையையும் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மழை காலத்தில் கடந்த காலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று இருப்பதை தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசியலுக்காக வானிலை மையமும் பயன்படுத்தப்படுவதால் நாட்டில் ஜனநாயகம் உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்திருக்கிறார். தேர்தல் நடத்தினால் டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தால், முதலமைச்சர் உத்தரவின் பேரில் தலைமைச்செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இடைத்தேர்தலை ஒத்திவைத்திருப்பதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இடைத்தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வியப்பளிக்கிறது, தேர்தலை கண்டு திமுக பயப்படுகிறது என விமர்சனம் செய்துள்ளார். 

சாஸ்திரா பல்லைக்கழகம் நில அபகரிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அந்த பல்லைக்கழக நிகழ்ச்சிக்கு ஆளநர் செல்வது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!