டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக.. அவர்களுக்கு பேச தகுதியில்லை.. கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!

Published : Aug 01, 2021, 06:18 PM ISTUpdated : Aug 01, 2021, 06:19 PM IST
டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக.. அவர்களுக்கு பேச தகுதியில்லை.. கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!

சுருக்கம்

கல்வி, கயவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பாடநூல் தலைவர் கோமாளி லியோனி, சுப.வீரபாண்டியன் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டும். இது போன்றவர்களை நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என ஹெச்.ராஜா காட்டமாக கூறியுள்ளார். 

முந்தைய ஆட்சி காலத்தின் போது விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது திமுக தான் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா;- மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என அறிவித்துள்ளது. எங்களுக்கு விண்ணப்பமே வரவில்லை என தெரிவித்துள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை.

ஆனால், தமிழக விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என்றார்.டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என கூறினார்.

மேலும், பேசிய அவர் கல்வி, கயவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பாடநூல் தலைவர் கோமாளி லியோனி, சுப.வீரபாண்டியன் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டும். இது போன்றவர்களை நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என ஹெச்.ராஜா காட்டமாக கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!