பதட்டம்..! பரபரப்பு...! நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு...

 
Published : May 02, 2018, 06:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
பதட்டம்..! பரபரப்பு...! நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு...

சுருக்கம்

DMK show black flag against Nimalara Seetharaman

காவிரி பிரச்சனை குறித்த கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்ன பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்பு, கல் வீச்சு சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியதால் கடைசியாக தமிழகம் வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் வந்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக கருப்பு கொடி காட்டியுள்ளது.

இந்நிலையில், பரமக்குடி அருகில் பார்த்திபனூரில் வந்த நிர்மலா சீதாராமன்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். நிர்மலா சீதாராமன் வருகையால் பார்த்திபனூரில் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திமுகவினருக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவிரி விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்னதால் திமுகவினர் ஆத்திரம் அடைந்ததாக கூறப்பட்டதால் கருப்பு கொடி காட்டப்பட்டுள்ளது. அதோடு விடாமல் சில தொண்டர்கள் நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்பு, கற்கள் வீசி இருக்கிறார்கள். இதனால் அந்த இடத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!