திமுக ஆட்சியை பிடித்தவுடன் அதை நடத்தியே தீருவேன்... மு.க.ஸ்டாலின் உறுதி..!

By Thiraviaraj RMFirst Published May 21, 2019, 3:12 PM IST
Highlights

துப்பாக்கிச் சூட்டையும், நடைபெற்ற அராஜகத்தையும் கண்டித்து கூட்டம் போடவும், உயிரிழந்த 13 பேருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி கூட நடத்தவும் விடாமல் அதிமுக அரசு இரக்கம் இல்லாமல் ஆணவ எண்ணத்துடன் தடை போட்டு இருக்கிறது. 

கொள்ளவில்லை. மக்களின் கடுமையான போராட்டத்தைக் கண்டு எங்கும் இயல்பாகக் கிளம்பிய ஆவேசமான எதிர்ப்பினைச் சமாளிக்க முடியாமல் இறுதியில், ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து, இன்று வரை அந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கையும் பெறப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு ஓர் ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இன்னும் அவர்களுக்கு உரிய நீதியும் கிடைக்கவில்லை.

தற்போது இந்தத் துப்பாக்கிச் சூட்டையும், நடைபெற்ற அராஜகத்தையும் கண்டித்து கூட்டம் போடவும், உயிரிழந்த 13 பேருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி கூட நடத்தவும் விடாமல் அதிமுக அரசு இரக்கம் இல்லாமல் ஆணவ எண்ணத்துடன் தடை போட்டு இருக்கிறது. ஒருபக்கம் ""நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தடை"" இன்னொரு பக்கம் ""ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க மறுப்பு"" என்று எப்போதும் போல இரட்டை வேடத்தைப் போட்டு கபட நாடகத்தை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஏமாற்று நாடகத்தை தூத்துக்குடி மக்களும் தமிழக மக்களும் நீண்ட நாள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ பொறுத்துக் கொள்ளவோ மாட்டார்கள். ஆகவே மனித நேயமற்ற முறையில், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நசுக்கும் வகையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக அரசு பிற்போக்குத் தனமாக நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.

அப்பாவிகளின் 13 உயிர்கள் அதிமுக ஆட்சியில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி துயரம் நிறைந்த அந்த குடும்பங்களுக்கும், போலீஸ் தடியடிக்கும் அதிமுக அரசின் அடாவடி அராஜகத்திற்கும் ஆளான தூத்துக்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் கழக அரசு அமைந்ததும் காட்டுமிராண்டித் தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும், அந்தத் துப்பாக்கி சூட்டிற்கு வன்மத்தோடு ஆணையிட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

அதே நேரத்தில், மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கசக்கிய அதிமுக ஆட்சியின் கொடூரமான துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கழக ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும் என்று இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உறுதி அளிக்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!