நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தது திமுக.. வேடிக்கை பார்த்தது அதிமுக.. மார்தட்டும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Sep 15, 2020, 12:44 PM IST
Highlights

நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தது திமுக தான். அதிமுக உறுப்பினர் இன்பதுரை தேவையற்ற தகவல்களை பதிவு செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றதும் திமுக தான் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2016ல் அதிமுக ஆட்சி வந்தபிறகு தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது.

2016ல் அதிமுக ஆட்சி வந்தபிறகு தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வை கொண்டு வந்தபோது காங்கிரசுக்கு திமுக அப்போது ஆதரவு அளித்தது என அதிமுக எம்எல்ஏ இன்பதுரை சட்டப்பேரவையில் பேசியுள்ளார். இன்பதுரையின் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து, சபாநாயகர் இருக்கைக்கு முன் வந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். மேலும்,  திமுகவுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை பேசிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். 

பின்னர், திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுகையில்;- நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தது திமுக தான். அதிமுக உறுப்பினர் இன்பதுரை தேவையற்ற தகவல்களை பதிவு செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றதும் திமுக தான் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2016ல் அதிமுக ஆட்சி வந்தபிறகு தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது.

மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் திணித்தபோது வேடிக்கை பார்த்தது அதிமுக. நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஆதரவளித்தது திமுக. 3 வருடங்களாக மசோதாவிற்கு ஒப்புதல் பெறாமல் இருந்தது அதிமுக அரசு தான் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை எதிர்த்த சட்டப்பேராட்டத்தில் தோற்றுபோனது அதிமுக. மேலும், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

click me!