பிணத்தை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்சம்.. கொக்கரிக்கும் எச்.ராஜா..!

Published : Sep 12, 2020, 05:33 PM ISTUpdated : Sep 12, 2020, 05:39 PM IST
பிணத்தை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்சம்..  கொக்கரிக்கும் எச்.ராஜா..!

சுருக்கம்

நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் நீட்டா கையாள்வதற்கு பாஜக தயாராக உள்ளது என  தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் நீட்டா கையாள்வதற்கு பாஜக தயாராக உள்ளது என  தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதிஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் திடீரென கடிதம் மற்றும் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிஸ்ரீ துர்கா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில்;-  நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் நீட்டா கையாள்வதற்கு பாஜக தயாராக உள்ளது. நீட் தேர்வை கண்டு ஓர் இருவர் தற்கொலை செய்து கொள்ளுவது துரதிருஷ்டமானது. உயிரிழப்பு என்பது ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல. ஆனால், பிணத்தை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்சக்கட்டம் என எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதுரை வடக்கு.. தளபதிக்குச் செக் வைக்கும் டாக்டர் சரவணனின் வியூகம்..! தடுமாறும் திமுக..!
வானூர் அதிமுக வேட்பாளராக ஏழைத் தொண்டன் முருகன்..! ஜெ., பாணியில் களமிறக்கும் இபிஎஸ்..!