மாரடைப்பு எப்படி வருது தெரியாத நீ எல்லாம் எப்படி தான் முதலமைச்சரா இருந்தியோ! EPSஐ லெப்ட் ரைட் வாங்கிய RS.பாரதி

By vinoth kumar  |  First Published Jun 16, 2023, 1:52 PM IST

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்டர்கள் தான் அதிமுகவினர் என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். 


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்டர்கள் தான் அதிமுகவினர் என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி;- அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதை கொச்சைப்படுத்தி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு இதயமே இல்லை. முதலமைச்சர் கூறி குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி  அவதூறாக பேசுகிறார். அமலாக்கத்துறை சோதனை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு குடிக்க தண்ணீர் கூட தரவில்லை. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆளுநருக்கு காத்திருக்க வேண்டியதில்லை; தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை வெளியிடுகிறது?

 உடல் நலம் பாதித்தவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் என்ன தவறு? மாரடைப்பு நோய் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மாரைடப்பு எப்படி வரும் என்பது கூட தெரியமால் அறியாமையில் இபிஎஸ் இருக்கிறார். மாரடைப்பு குறித்து தெரியாதவர் எப்படி முதலமைச்சராக இருந்தார். இஎஸ்ஐ மருத்துவமனை அறிக்கையை இபிஎஸ் கொச்சைபடுத்தியுள்ளார். 

சோதனை குறித்து பேசுவதற்கு இபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை. கட்சி தொண்டருக்கு ஏதேனும் ஒன்று என்றால் பதறிப்போய் பார்க்கும் கட்சிதான் திமுக. அதில் என்ன தவறு இருக்கிறது. வேலுமணி, தங்கமணி ரெய்டு வீட்டில் நடத்திய அமித்ஷா  காலில் விழுந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு பரிகாரமாக ராஜ்யசபா எம்பி சீட்டை ஒன்றும் இல்லாத ஜி.கே வாசன் வழங்கினார்.  எடப்பாடி பழனிச்சாமி செந்தில் பாலாஜி நாடக நடத்துகிறார் என தெரிவித்துள்ளனர். அவருக்கு என்ன தெரியும். நேற்று வந்தவர். 

இதையும் படிங்க;- அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சி போய்விடும் என அஞ்சி பதறுகிறார் ஸ்டாலின்.! -இபிஎஸ்

அதிமுகவிற்கு கொடுக்கப்பட வேண்டிய எம்.பி பதவியினை மிரட்டி ஜி.கே.வாசனுக்கு வாங்கினார்கள் இதையெல்லாம் ஏன் கொடுத்தார் எடப்பாடி. பல்வேறு மாநிலங்களில் திமுகவின் வாக்குறுதிகளை கொடுத்து வெல்கிறார்கள்.. ஒரு தலைவி மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு கோடி, ஒன்றரை கோடிக்கு இட்லி சாப்பிடும் கூட்டமல்ல திமுக. 

இதையும் படிங்க;- சகோதரி கனிமொழி கைதுக்கு துடிக்காத முதல்வர் ஸ்டாலின்.. செந்தில்பாலாஜி கைதுக்கு பதறுவது ஏன்? தமாகா கேள்வி..!

எடப்பாடி மீது 4000கோடி நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்தார் அதை விசாரிக்க நீதிமன்றம் தலையிடவேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தேன். நெடுஞ்சாலை ஊழலை குறித்தும் என் மீது எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். முதன் முதலில் டான்சி ஊழல் வழக்கை நான் தான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.  ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்கு நடைபெற்றது. டான்சி வழக்கில. தண்டனை பெற்றார் ஜெயலலிதா, அப்போது பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த நிலத்தை ஜெயலலிதா திருப்பி கொடுத்தார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள டான்சி நிலத்தை பெறப்பட்டது. அது நான் போட்ட வழக்கு தான் என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

click me!