அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக கைவிட வேண்டும்... அதிமுகவுக்காக வரிந்துகட்டும் பாஜக..!

Published : Aug 10, 2021, 02:55 PM IST
அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக கைவிட வேண்டும்... அதிமுகவுக்காக வரிந்துகட்டும் பாஜக..!

சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக தெரிகிறது என கே.டி.ராகவன் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக தெரிகிறது என கே.டி.ராகவன் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 52 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து கூட்டு சதி, மோசடி, நம்பிக்கை மோசடி பிரிவில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்படுவது அதிமுக தலைமையை கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாகவும் அதிமுக பிரமுகர்களின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் திமுக அரசு சோதனையை ஏவிவிடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் கூறுகையில்;- அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!