திமுக மா.செ.,க்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு!! திமுக தலைவரான பிறகு ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம்

Published : Sep 01, 2018, 03:33 PM ISTUpdated : Sep 09, 2018, 08:20 PM IST
திமுக மா.செ.,க்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு!! திமுக தலைவரான பிறகு ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம்

சுருக்கம்

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

கருணாநிதியின் மறைவிற்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதியின் மறைவிற்கு பிறகு போர்க்கொடி தூக்கிய அழகிரி, அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைதி காத்து வருகிறார். இதற்கிடையே திமுக பொதுக்குழு கூடி, ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுவிட்டார். 

இந்நிலையில், திமுகவின் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. 

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையில் நடக்கப்போகும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு அவரது தலைமையில் நடக்க உள்ள முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!