ஒன்றிய அரசுக்கு எதிராக இப்படி தான் நடக்கணும்.. திமுக எம்.பி.க்களுக்கு ஆலோசனை வழங்கப்போகும் மு.க.ஸ்டாலின்..!

Published : Jul 15, 2021, 02:12 PM IST
ஒன்றிய அரசுக்கு எதிராக இப்படி தான் நடக்கணும்.. திமுக எம்.பி.க்களுக்கு ஆலோசனை வழங்கப்போகும் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

வரும் 16ம் தேதி திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

வரும் 16ம் தேதி திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 16-7-2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம், மேகதாது அணைப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், கொரோனா நிலவரம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19 ம் தேதி தொடங்குகிறது. அப்போது, திமுகவின் நிலைப்பாடுகள் குறித்தும், என்னென்ன கேள்விகள் எழுப்ப வேண்டும், எதைப் பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி.களுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!