’ஜெயலலிதாவை காப்பியடித்த திமுக எம்.பி.,கள்...’ தீராத தமிழ் வாழ்க கோஷம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 20, 2019, 4:41 PM IST
Highlights

நாற்பது வயதிலேயே எம்.பியான ஜெயலலிதா தமிழில் தான் உறுதி மொழி ஏற்றார். அவரை காப்பியடித்தே திமுக எம்பிகள் நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக’ நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது. 
 

நாற்பது வயதிலேயே எம்.பியான ஜெயலலிதா தமிழில் தான் உறுதி மொழி ஏற்றார். அவரை காப்பியடித்தே திமுக எம்பிகள் நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக’ நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது. 

ஏதோ இவர்கள் தான் முதன் முதலில் தமிழில் பதவியேற்பு உறுதி மொழி மேற்கொண்ட புரட்சியாளர்களை போல தங்களை காட்டிக் கொண்டு ஊடகக் கூலிகளை வைத்து ஓர் உண்மைக்கு மாறான மாயையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

எத்தனையோ தலைவர்கள் தமிழில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்த நிகழ்வுகள் வரலாற்றில் குறிப்புகளாக இருக்கின்றன. இவ்வளவு ஏன், அகவை நாற்பதிலேயே நாடாள வந்த எங்கள் அம்மா புரட்சித் தலைவி மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றதும் அவருக்கு பேரறிஞர் அண்ணா அமர்ந்திருந்த அதே இருக்கை எண் ஒதுக்கப்பட்டதும் காலத்தால் அழிக்க முடியாத காகித சாட்சிகளாய் அப்போதே செய்தி தாளில் பிரசுரமான குறிப்புகள் வரலாற்று பதிவுகளாய் இருக்கிறது. 

அப்படி இருக்க நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை என்று நொடிக்குநொடி சுந்தர தமிழுக்கு சுளுக்கு விழ வைக்கும் சன் குழுமத்தின் தயாநிதிமாறன் உட்பட திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியேற்பின்போது தமிழ் வாழ்க என்று கூவியதை சுட்டிக்காட்டி புல்லரித்துப் போகிறது ஒரு புரியாத கூட்டம். ஆனால் தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டுவிட்டு அவர்கள் கையெழுத்து போட்டதோ ஆங்கிலத்தில் என்பது தான் கூடுதல் தகவல்’’ எனக் கூறியிருக்கிறது. 

click me!