Kanimozhi : திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றி செல்லுமா? செல்லாதா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

By vinoth kumar  |  First Published May 4, 2023, 11:14 AM IST

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சுமார் 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


2019ம் ஆண்டு தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சுமார் 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி வேட்பு மனுவில் அவரது கணவர் அரவிந்தனின் பான் கார்டு எண்ணை குறிப்பிடவில்லை என தெரிவித்திருந்தார். 

Latest Videos

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், கனிமொழியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு இடைக்கால தடை விதித்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த மாதம் ஏப்ரல் 27ம் தேதி வந்த போது  கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நிரந்தர கணக்கு என் என்பது இந்தியாவில் தான் உள்ளதே தவிர சிங்கப்பூரில் அல்ல. ஆவண உண்மை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். எதிர்மனுதாரர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து கனிமொழியின் வெற்றி செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

click me!