ஏரியைக்கூட விடமாட்டீங்களா...? அதிமுக ஆட்சி மீது திமுக எம்.பி. கனிமொழி கடுகடு!

Published : Jun 06, 2019, 09:10 PM IST
ஏரியைக்கூட விடமாட்டீங்களா...? அதிமுக ஆட்சி மீது திமுக எம்.பி. கனிமொழி கடுகடு!

சுருக்கம்

ஏரியைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது.  சோழிங்கநல்லூர் ஏரி பாதுகாக்கபட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும்கூட பாதுகாப்பு இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். 
சென்ற ஆண்டு பருவ மழை பொய்த்ததால், சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏரிகள், கிணறுகள், குளங்கள் என எல்லாமே வற்றிக்கிடக்கிறது. குழாய்களில் தண்ணீர் வருவது நின்றுவிட்ட  நிலையில், லாரி தண்ணீருக்காக மக்கள் தவமாய் காத்திருக்க வேண்டிய நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. கால்வாய்களை முறையாகப் பராமரித்து தூர் வாறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இந்நிலையில் தென் சென்னையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு ஏரி தொடர்பாக ட்விட்டரில் திமுக எம்.பி. கனிமொழி நிலைத்தகவலை பதிவு செய்துள்ளார். அதில், “அதிமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. ஏரியைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது.  சோழிங்கநல்லூர் ஏரி பாதுகாக்கபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏரி மூடப்பட்டு காவல் நிலையம் கட்டுவது தொடர்பான வீடியோவையும் கனிமொழி பதிவேற்றியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்