திமுகவின் கஜானாவாக பார்க்கப்படும் எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 12, 2020, 2:43 PM IST
Highlights

அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.89.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறையினர் அதிரடியாக முடக்கி உள்ளனர். 

அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.89.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறையினர் அதிரடியாக முடக்கி உள்ளனர். 

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் பேக்டரியை முறைகேடாக வாங்கியுள்ளதாக குவிட்டன்தாசன் என்பவர் சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்துள்ளார். மேலும், ஜெகத்ரட்சகன் பெயரிலான முதலீட்டை குடும்பத்தினர் பெயருக்கு மாற்றியதிலும் விதிமீறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு உள்ளிட்ட ரூ.89.19 கோடி மதிப்புடைய  சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதேபோல், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 

click me!