ஒரு மனுஷன பொது இடத்துல இப்படியா கலாய்ப்பது? உள்ளே புகுந்து வெச்சு செஞ்ச செந்திலை மானாவாரியா பாராட்டித்தள்ளும் உ.பி.,க்கள்

By sathish kFirst Published Sep 29, 2019, 3:25 PM IST
Highlights

வழக்கமாக யார் அறிக்கைவிட்டாலோ அல்லது கருத்து சொன்னாலோ ஒரு வரியில் ட்வீட் போட்டு கலாய்த்து வரும் டாக்டர் ராமதாஸையே மரண கலாய் கலாய்த்துள்ளார் மற்றொரு டாக்டரான தருமபுரி எம்பி செந்தில்குமார்.

ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பி இருக்காங்க. மொதல்ல அதை  விசாரிக்கணும் அய்யா என திமுக எம்பி செந்தில்குமார் ராமதாஸை கலாய்த்த சம்பவம் இணையத்தில் பயங்கரமான வைரல் ஆகியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி சேர்ந்த விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதில் மதிமுகவின் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொ.ம.தே.க வை சேர்ந்த சின்ராஜ் உள்ளிட்டோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.  அதிமுவ கூட்டணியில் இருந்த பாஜக, பாமக, தேமுதிக ஜெயிக்கவில்லை அதிமுகவில் மட்டும் ஓபிஎஸ் மகன் ஜெயித்தார்.

இந்நிலையில் இந்திய தேர்தல் கழிஷனின், தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது. ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக்கொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் எனவே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேற்கண்ட 4 எம்பிகளின் வெற்றியும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்  மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா மீது புகார் எழுந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ; ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு: செய்தி - இந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து கொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ?  என கேள்வியாக தனது ஆதங்கத்தை கொட்ட இதுதான் கலாய்க்க சரியான சமயம் என காத்திருந்த தருமபுரி எம்பி செந்தில்குமார் இரண்டே வரியில் மரணகளாய் களாய்த்துள்ளார்.

அதில்;  "ஐயா அருமை ஐயா., ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒரு கட்சி ., இங்கே தமிழ் நாட்டில் இருந்து ஒரு ராஜ்ய சபா MP., டெல்லிக்கு அனுப்பியதாக தகவல்., கொஞ்சம் அதுவும் விசாரித்து மக்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா" என தெரிவித்துள்ளார்.  

எம்பி செந்திலின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள்.... 

உங்கள் கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கிருஷ்ணசாமி, ஏசி.சண்முகம் ஆகியோர் இந்த ஆள்மாறாட்ட வரம்பிற்குள் வரமாட்டார்களா அய்யா.. என கேட்டுள்ளனர். 

பெரிய அய்யா அக்கவுண்ட் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது என உபிக்கள் கலாய்க்க, அதற்க்கு பாமக நெட்டிசன்கள் தரமற்ற பதிவுக்கு தரமான பதில் ஐயா இனி கண்டபடி பதிவுகள் போடக்கூடாது.இளைஞர்கள் விழிப்புடன் உள்ளனர். என சமாளிக்கும் விதமாக கலாய்க்கவே முடியாமல் திணறியும் உள்ளனர். ஒரு  மனுஷன பொது இடத்துல இப்படியா கலாய்ப்பது என பதிலே சொல்லாமல் சைலண்ட்டாக குமுறி வருவது ட்விட்டரை பார்த்தாலே தெரிகிறது.

click me!